சாகிப் அஞ்சும் என்ற புகைப்படக்காரர் இந்த தருணத்திற்காக ஏழுவருடங்கள் காத்திருந்து முயற்சி செய்து படம் பிடித்துள்ளார்
வழக்கத்திற்கு மாறாக ஒரு அசாதாரண மழை புயல் வெள்ளிக்கிழமை மாலை துபாயை தாக்கி தொடர்ந்து மழை பெய்தது. பிரபலமான சுற்றுலா தளத்தை மேகங்கள் சூழ்ந்தன. கடுமையான மழையின்போது மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை மின்னல் தாக்கும் அரிய தருணத்தை புகைப்படக்காரர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.
சாகிப் அஞ்சும் என்ற புகைப்படக்காரர் இந்த தருணத்திற்காக ஏழுவருடங்கள் காத்திருந்து முயற்சி செய்து படம் பிடித்துள்ளார். முழு இரவும் புர்ஜ் கலீஃபாவுக்கு வெளியே முகாமிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை மாலை, 2,720 அடி உயர வானளாவிய கட்டிடத்தின் உச்சியில் மின்னல் தாக்கியதை படம் பிடித்துள்ளார். என்று யாகூ நியூஸ் தெரிவிக்கிறது.
”நான் நினைக்கிறேன் இந்த தருணத்தை கடவுள் திட்டமிட்டுள்ளார்.2020 ஆம் ஆண்டை தொடங்குவதற்கான சின்னமாக புர்ஜ் கலீஃபாவை மின்னல் தாக்கியது” என்று மகிழ்ச்சியடைந்த புகைப்படக் கலைஞர் தெரிவித்தார். அவரது அசாதாராண வீடியோ மின்னல் கட்டிடத்தை தாக்கி ஒளிர்வதைக் காட்டுகிறது.
சாகிப் அஞ்சும் அரிய நிகழ்வை படம் பிடித்த அதிர்ஷ்டசாலி மட்டுமல்ல. அவரது புகைப்படத்தை துபாயின் இளவரசர் ஷேக் ஹம்தனும் பகிர்ந்துள்ளார்.
Click for more
trending news