This Article is From Nov 08, 2018

'லயன் ஏர்' விமானம் சுமத்ரா தீவிலிருந்து புறப்படும்போது விபத்து!

ஏர்லைனின் பேச்சாளர் கூறிகையில், "ஏர்போர்ட்டின் டிராபிக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் வந்தது" என்று தெரிவித்துள்ளார்.

'லயன் ஏர்' விமானம் சுமத்ரா தீவிலிருந்து புறப்படும்போது விபத்து!

லயன் ஏர் நிறுவனம் அங்கிருந்த ஏர்போர்ட் ஊழியரின்மேல் குற்றம் சாட்டியது. இந்த விபத்தால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை

Jakarta:

 

லயன் ஏர்' (Lion Air) விமானம் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு விபத்துக்குள்ளாகி 189 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை,சுமத்ரா தீவு ஏர்போட்டில் இருந்து புறப்பட்ட அதே நிறூவனத்தின் விமானம் ரன்வேயில் இருந்த கம்பியில் முட்டி விபத்து ஏற்பட்டது.

"லயன் ஏர் நிறுவனம் அங்கிருந்த ஏர்போர்ட் ஊழியரின்மேல் குற்றம் சாட்டியது. இந்த விபத்தால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை" என்று இஎப்இ செய்தி தெரிவிக்கிறது.

ஏர்லைனின் பேச்சாளர் கூறிகையில், "ஏர்போர்ட்டின் டிராபிக் கட்டுப்பாட்டாளரிடம் இருந்து மன்னிப்பு கடிதம் வந்தது" என்று தெரிவித்துள்ளார்.

ரன்வேயில் இருந்தவர்கள் இந்தச் சம்பவம் குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

லயன் ஏர் விமானம் ஒன்று ஜாவா கடலில் விழுந்து, விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்த நிலையில், இப்போது இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்தின் அனைத்து விமானங்களையும் சிறப்பு சோதனை செய்ய வேண்டும் என்று இந்தோனேஷிய போக்குவரத்து அமைச்சகத்துக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடலில் விழுந்த 'போயிங் 737 ம்மேக்ஸ் 8' மாடல் அனைத்தையும் சோதனைக்கு உட்படுத்தும்படி போக்குவரத்து அமைச்சகமும் உத்தரவிட்டுள்ளது.

விமானத்தைக் குறித்து பிளாக் பாக்ஸ், "விமானத்தின் சென்சார் சரியாக வேலை செய்யவில்லை எனவும், அதில் தவறான தகவல்கள் காட்டப்படுகின்றன எனவும்" வெளியிட்டுள்ளது.

 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.