বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Oct 14, 2019

Viral Video : சுற்றுலா பயணிகளின் வாகனத்தை துரத்தும் சிங்கம்...!

பெல்லாரியில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் விலங்கியல் பூங்காவிற்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

Advertisement
விசித்திரம் Edited by (with inputs from IANS)

அடல் பிஹாரி வாஜ்பாய் விலங்கியல் பூங்காவிற்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கர்நாடக விலங்கியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வாகனத்தை சிங்கம் துரத்தியது. பெல்லாரியில் உள்ள அடல் பிஹாரி  வாஜ்பாய் விலங்கியல் பூங்காவிற்கு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.  இந்த சம்பவத்தின் வீடியோ ஆன்லைனில் வைரலாகியுள்ளது. 

ஒரு நிமிடத்திற்கும் நீளமான வீடியோவில், சிங்கம் ஆத்திரத்துடன் வாகனத்தை துரத்துவதைக் காணலாம். வாகனம் வேகமெடுக்கும் வரை  சிங்கம் துரத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை ஆன்லைனில் பதிவேற்றப்பட்ட வீடியோவில் சஃபாரி வாகனத்திற்குள் பயணித்த சுற்றுலா பயணியினால் படமாக்கப்பட்டுள்ளது. 

இதோ அந்த வீடியோ:

  .  

Advertisement

வெள்ளிக்கிழமை யூட்யூப்பில் வெளியிடப்பட்டதிலிருந்து இந்த வீடியோ 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் அதற்கு மேல் கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது. இது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற பிற சமூக ஊடகங்களிலும் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

சுற்றுலாவாசிகள் வாகனத்தை சிங்கம் ஏன் துரத்த ஆரம்பித்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. 

Advertisement

Advertisement