பாரிஸ் நகரில் சிங்கக்குட்டி ஒன்று பளீச்சென்ற காரில் போவதை கண்ட மக்களின் புகாரையடுத்து போலீசார் நடத்திய சோதனையில் சிங்கக் குட்டி பிடிபட்டது.
இச்சம்பவம் குறித்து அந்த ஓட்டுனரிடம் விசாரணை நடத்திய போலீசார்க்கு அந்த சிங்கக்குட்டியை, வாடகைக்கு எடுக்கப்பட்ட லம்போகினிகாரில் வைத்து கடத்தி சென்றதாகவும், அக்குட்டியை செல்லப்பிராணியாக வளர்பதற்க்காக பிடிக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.மேலும் அந்த சிங்கக்குட்டியை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியானது.
இதுபோன்று சம்பவம் கடந்த மாதம் பாரிஸ்சில் உள்ள ஒரு அப்பார்மென்டில் வைத்து போலீசாரிடம் பிடிபட்டது. நீதிமன்றத்தில் வைத்து விசாரித்தபோது, இந்த வழக்கு தனிபட்டதில்லை என்னும் இதற்கும் வேறு மூன்று கடத்தல் சம்பவத்திற்க்கும் தொடர்புள்ளதாக தெரிய வந்தது.
அந்த குட்டிகள் தலைநகருக்கு வெளியே இருப்பதாக தகவல் வெளியானது. இந்த செயலில் ஈடுபட்ட நபருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் பிரான்ஸ் நாட்டிலுள்ள மார்சாலி நகரத்தில் உள்ள ஒரு கார் கேரேஜில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது. அக்குட்டிகளை தற்போழுது வன விலங்குகளை பாதுகாக்கும் அரசு சாரா அமைப்பு கவனித்து வருகிறது.
Click for more
trending news