This Article is From Jul 13, 2020

தமிழகம் முழுவதும் கணினிமயமாகும் மதுபானக் கடைகள்! - டாஸ்மாக் அறிவிப்பு

தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது.

Advertisement
தமிழ்நாடு Posted by

தமிழகம் முழுவதும் கணினிமயமாகும் மதுபானக் கடைகள்! - டாஸ்மாக் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்ட கடைகள் கடந்த மே.7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதித்தது. எனினும், நீதிமன்ற நிபந்தனைகளை மீறியதால் திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூடுமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. 

இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது. சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட இடைக்கால உத்தரவுக்கு தடை விதிக்கிறோம் என்று கூறியது. மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் உத்தரவிட்டது. 

Advertisement

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஆன்லைன் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை அரசு பரிசீலித்து வருகிறது. எனவே, இந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகள் கணினிமயமாக்குவதற்கான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மதுபானங்களின் இருப்பு, விற்பனை விவரங்களை அறிக்கையாக தயாரித்து கணினிமயமாக்க டெண்டர் அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement