This Article is From Jun 11, 2020

தீவிரமடைந்த கொரோனா தொற்று… சென்னை மக்களுக்காக மண்டலவாரியாக உதவி எண் வெளியீடு!

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement
தமிழ்நாடு Written by

தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 3,405 மற்றும் 3,069 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Highlights

  • தமிழகத்திலேயே சென்னையில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்
  • மணலி மண்டலத்தில் மிகக் குறைவான கொரோனா பாதிப்பு உள்ளது

ஜூன் 11 ஆம் தேதி, காலை 8 மணி நிலவரப்படி, சென்னையில் மொத்தமாக 25,937 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 12,507 பேர் சிகிச்சையின் மூலம் மீண்டு வந்துள்ளனர். அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 258 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். தற்போது 12,839 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 

சென்னையிலேயே அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 4,405 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தண்டையார்பேட்டை மண்டலத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்திலும் முறையே 3,405 மற்றும் 3,069 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மணலி மண்டலத்தில் மிகக் குறைவாக 383 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து மண்டல மக்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டால் எளிதில் உதவி பெற, மற்றும் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள மண்டலவாரியாக மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் ரிப்பன் மாளிகையில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு நேரடியாக தொடர்பு கொள்ளவும் மொபைல் எண் வெளியிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement