நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பாராத விதமாக அமைந்த பாஜக கூட்டணி அரசு, நாளைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதன் கிழமை மாலைக்குள், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தீர்ப்பின் 5 முக்கிய அம்சங்கள்:
1.3 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு, நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கறார் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2.இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த இடைக்கால சட்டசபை சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் இடைக்கால சபாநாயகருக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் பதவியேற்பை முடித்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
3.எம்.எல்.ஏ-க்களின் பதவியேற்பு நாளை மாலை 5 மணிக்குள் முடிந்திருக்க வேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
4.நம்பிக்கை வாக்கெடுப்பு நேரலையில் ஒளிபரப்பப்பட வேண்டும் என்று நீதிமன்ற அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
5.ரகசிய முறையில் வாக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.