சத்தீஸ்கரில் நடந்த நிகழ்ச்சியில் பேசும் மோடி
ஹைலைட்ஸ்
- சத்தீஸ்கரில் சீக்கிரமே சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது
- கடந்த 2 மாதங்களில் 2-வது முறையாக மோடி சத்தீஸ்கருக்கு விசிட் அடிக்கிறார்
- பிலாய் எஃகு தொழிற்சாலை இன்று அவர் திறந்து வைத்தார்
சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று அங்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
இன்று காலை 10:30 மணி அளவில் சத்தீஸ்கர், ராய்பூரில் இருக்கும் சுவாமி விவேகனந்தா விமான நிலையத்துக்கு வந்தார் பிரதமர் மோடி. இதையடுத்து, அவர் நயா ராய்பூருக்கான 'இன்டகரேட்டட் கமாண்டு அண்டு கன்ட்ரோல் சென்டர்'-ஐ திறந்து வைக்கிறார். இதன் பின்னர், அவர் பிலாய் பகுதிக்குச் சென்றார். அங்கு அவர் சாலை வழி மக்களைப் பார்த்து கையசைத்தபடி பிலாய் எஃகு தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். அங்கிருந்த பொறியாளர்கள் அவருக்கு எஃகு தொழிற்சாலை குறித்த விவரங்களை விளக்கினர். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்த பின்னர் அவர் ஜக்தல்பூரில் இருக்கும் விமான நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.
சத்தீஸ்கர் மாநில சட்டமன்றத்துக்கு இன்னும் சில வாரங்களில் தேர்தல் வரப் போகும் நிலையில், கடைசி இரண்டு மாதங்களில் மட்டும் அவர் அம்மாநிலத்திற்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.