This Article is From Jul 24, 2020

நான்கு மணிநேரம் சுமார் 100 கேள்விகள் என அத்வானியிடம் நீதிமன்றம் கிடுக்குப்பிடி விசாரணை!

16 ஆம் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இந்துத்துவ ஆர்வலர்களால் இடிக்கப்பட்டது. இதில் சதித்திட்டம் தீட்டப்பட்ட தாக பாஜக தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சதித்திட்டம் தீட்டப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் பாஜக தலைவர்களில் எல்.கே.அத்வானி, முர்லி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் அடங்குவர்

ஹைலைட்ஸ்

  • தனது வாதத்தினை சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு மூலம் சமர்பிப்பு
  • 4.5 மணி நேரம் நீடித்த விசாரணை
  • காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை, 100 க்கும் மேற்பட்ட கேள்விகள்
Lucknow:

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனது தரப்பு வாதத்தினை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வீடியோ இணைப்பு வாயிலாக சமீபத்தில் பதிவு செய்துள்ளார்.

அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்தது தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 92 வயதான அத்வானி வீடியோ இணைப்பு மூலம் லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

4.5 மணி நேரம் நீடித்த விசாரணையின் போது, ​​காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை, 100 க்கும் மேற்பட்ட கேள்விகள் அத்வானியிடம் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டன. இது குறித்து, “அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.” என அத்தவானியின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்நிலையில் புதன் கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அத்வானியை சந்திதார். அவர்களுக்கிடையேயான உரைாயடல் சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்தது.

முன்தாக இவர்களை வழக்கிலிருந்து ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீர்பளித்திருந்தது. பின்னர் இந்த தீர்ப்பினை அலகாபாத் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் போக்கை மாற்றி, விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு எவ்வித முகந்திரமும் இல்லையெனக் கூறி, இந்த வழக்கை மறு விசாரணையாக தினந்தோரும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பினை ஆகஸ்ட் 31 க்குள் வழங்க வேண்டும்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு திட்டமிடப்படி ஒரு பிரமாண்டமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல வி.ஐ.பி.களும் பங்கேற்கிறார்கள். இதில், அத்வானி மற்றும் ராமர் கோயில் இயக்கத்தின் பிற தலைவர்களும் அழைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

16 ஆம் நூற்றாண்டு பாரம்பரியம் கொண்ட பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இந்துத்துவ ஆர்வலர்களால் இடிக்கப்பட்டது. இதில் சதித்திட்டம் தீட்டப்பட்ட தாக பாஜக தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கையில் ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய மசூதி இருந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

.