हिंदी में पढ़ें Read in English বাংলায় পড়ুন
This Article is From Aug 07, 2019

சுஷ்மா என் பிறந்தநாளை மறந்ததே இல்லை: கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய அத்வானி!

மனமுடைந்து காணப்பட்ட எல்.கே.அத்வானியின் மகள் பிரதிபா, சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரியைக் கட்டித்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement
இந்தியா Edited by

ஒரு சிறந்த பேச்சாளராக என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார்.

New Delhi:

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மரணம் "மிகுந்த வருத்தமளிக்கிறது" என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். சுஷ்மா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து, சுஷ்மாவுடனான தனது நினைவுகளையும் அத்வானி பகிர்ந்து கொண்டார். 

முன்னாள் வெளியுரவுத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா, பல்வேறு காரணங்களுக்காக சீமிப காலங்களில் மிகவும் விரும்பப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார். இவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் அவரது கட்சி தலைவர்கள், தொண்டர்ளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல், பேஸ்புக், ட்வீட்டர் போன்ற சமூகவலைதளங்களிலும் பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். 



அந்தவகையில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார். சுஷ்மா இல்லத்தில் நேரில் சென்று அவரது உடலுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்தார். எல்.கே.அத்வானியுடன் வந்திருந்த அவரது மகள் பிரதிபாவும், சுஷ்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, சுஷ்மா சுவராஜின் மகள் பன்சூரியைக் கட்டித்தழுவி ஆறுதல் தெரிவித்தார். 

80களில் நான் பாஜக தேசியத் தலைவராக இருந்த போது, சுஷ்மா நம்பிக்கைகுரிய இளம் போராளியாக திகழ்ந்தார். அவரை நான் எனது குழுவுடன் இணைத்தேன். 

சுஷ்மா ஒரு திறமையான பேச்சாளர், அவரது பேச்சில் அரசியல் நிகழ்வுகளை நினைவுக்கூறும் விதத்தைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். சில நாட்களில் அவர் மிகவும் பிரபலமானார். எங்கள் கட்சியின் முன்னணித் தலைவரானார். அனைத்து பெண் அரசியல் ஆளுமைகளுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். 

இந்த ஆளுமைகளைத் கடந்து, அவர் ஒரு சிறந்த மனிதர். அனைவரையும் அன்புடன் அரவணைத்துச் செல்பவர். இதுவரை எனது எந்த ஒரு பிறந்தநாளையும் அவர் மறந்தததில்லை. ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் எனக்கு விருப்பமான சாக்லேட் கேக்குடன் என்னை சந்திக்க வந்துவிடுவார். ஒரு சிறந்த பேச்சாளராக என்னை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருப்பார். 

இது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு, அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று அவர் கூறியுள்ளார். 

 

Advertisement