This Article is From May 23, 2019

தாமரை வடிவ கேக்குடன் தங்கள் வெற்றியை கொண்டாட தயாராக இருக்கும் பாஜகவினர்!!

இன்று மதியம் மஹாராஷ்டிராவின் முதலமைச்சம் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜகவின் தலைமை செயலகத்தில் தங்கள் வெற்றியை கொண்டாட 125 கிலோ கேக் மற்றும் 2000 கிலோ லட்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளார். 

தாமரை வடிவ கேக்குடன் தங்கள் வெற்றியை கொண்டாட தயாராக இருக்கும் பாஜகவினர்!!
New Delhi:

மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், நேற்று பாஜகவினர் தங்கள் வெற்றி கொண்டாட்டத்தின் முன்னேற்பாடாக தாமரை வடிவ கேக்குகளுடன் தயாராக உள்ளனர்.  பாஜகவின் அடிமட்ட தொண்டர் தொடங்கி உறுப்பினர்கள் அனைவருமே மக்களை தேர்தலில் ஜெயித்து இம்முறையும் ஆட்சியை கைப்பற்றுவோம் என்று அதீத நம்பிக்கையில் இருக்கிறார்கள். இதற்காக ஏழு கிலோவிற்கு லட்டூ கேக் தயாரித்துள்ளனர்.  மேலும் அதேபோன்று ஒன்பது கேக்குகளை 4 முதல் 5 கிலோ வரை செய்து தேர்தல் முடிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

தேர்தல் முடிவிற்கு பிறகு பாஜகவின் மைய அலுவலகத்தில் இன்று மாலை வெற்றி கொண்டாட்டம் துவங்க திட்டமிட்டுள்ளனர்.  மேலும் பிஜேபியின் செய்தி தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் 50 கிலோ பிஸ்தா-பாதாம் பர்ஃபியையும் கூடவே தாமரை வடிவ இனிப்புகளையும் ஆர்டர் செய்துள்ளார்.  கேக்கின் விலை கிலோ 1000 ரூபாயும், மற்ற இனிப்புகளின் விலை கிலோவிற்கு 2000 ரூபாயாகவும் இருக்கும் நிலையில் இந்த இனிப்புகளை பெங்காளி பேஸ்ட்ரி ஷாப்பில் பிஜேபியினர் ஆர்டர் செய்துள்ளனர். 

lcatn94s

முடிவுகளை பாஜகவுக்கு சாதகமாக வரும் பட்சத்தில், இன்று மதியம் மஹாராஷ்டிராவின் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் பாஜகவின் தலைமை செயலகத்தில் தங்கள் வெற்றியை கொண்டாட 125 கிலோ கேக் மற்றும் 2000 கிலோ லட்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளார்.  இந்த கொண்டாட்டத்தில் கட்சி தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

.