This Article is From Dec 22, 2019

'மகாராஷ்டிராவில் ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் ரத்து' - முதல்வர் அறிவிப்பு!!

Maharashtra farm loan waiver: மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'மகாராஷ்டிராவில் ரூ. 2 லட்சம் வரையிலான விவசாயக் கடன் ரத்து' - முதல்வர் அறிவிப்பு!!

ரூ. 2 லட்சம் வரையில் கடன் வாங்கிய விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Mumbai:

மகாராஷ்டிராவில் ரூ. 2 லட்சம் வரை பெற்றிருந்த விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் கடந்த செப்டம்பர் 30-ம்தேதி வரையில் வாங்கப்பட்ட ரூ. 2 லட்ச விவசாய கடன் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

'மகாத்மா ஜியோதிராவ் பூலே கடன் ரத்து திட்டம்' என்ற பெயரில் மகாராஷ்ராவை ஆளும் சிவசேனா கூட்டணி அரசு கடனை தள்ளுபடி செய்யும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளில் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதேபோன்று வாங்கிய கடனை சரியான முறையில் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கும் உத்தவ் தாக்கரே இன்னொரு திட்டத்தை அறிவித்துள்ளார். விவசாயிகள் சிறிய உதவிக்காக மும்பை வரைக்கும் வரத் தேவையில்லை என்று தெரிவித்துள்ள உத்தவ் தாக்கரே, இதற்காக அவரது அலவலகத்தில் குழு ஒன்று மாவட்டம் வாரியாக அமைக்கப்படும் என்றும், அவர்களிடம் விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார். 

இதற்கிடையே விவசாயிகளின் அனைத்துக் கடன்களையும் உத்தவ் தாக்கரே அரசு ரத்து செய்யவில்லை என்று கூறி, பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. கூட்டணி அரசு அமைத்து மக்களுக்கு துரோகம் செய்த அரசு, தற்போது விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளதாக முன்னாள் முதல்வரும், சட்டமன்ற பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

கடந்த அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது விவசாயிகள் கடன் முக்கிய பிரச்னையாக கருதப்பட்டது. மாநிலத்தில் அதிக இடங்களில் வென்ற கட்சியாக மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 105-ல் பாஜக வெற்றி பெற்றிருந்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், தேவேந்திர பட்னாவீஸ், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாருடன் சேர்ந்து ஆட்சியமைத்தார்.

பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, துணை முதல்வர் பதவியை அஜித் பவார் ராஜினாமா செய்தார். இதையடுத்து, பெரும்பான்மை இல்லாததால் பட்னாவிசும் ராஜினாமா செய்ய நேரிட்டது. 

இதன் தொடர்ச்சியாக தற்போது அங்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வருகிறது.

.