சில மாதங்களுக்கு முன் கேரளாவை சேர்ந்த நபர் ஒருவர் பாடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியிடபட்டன, வைரல் ஆன அவ்வீடியோ காட்சிகள், சங்கர் மாகாதேவன் மற்றும் பந்தளம் பாலன் போன்ற முன்னிலை இசைக் கலைஞர்களிடம் பாராட்டுக்களை அந்ந நபருக்கு தேடித் தந்தது.
இதேபாணியில் தற்போது ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் 1994 ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த ‘பிரேமிக்கிது' படத்தில் வெளியான ‘ஓ செலியா' பாட்டை அவரது மெல்லிய குரலால் பாடி மற்றவர்களின் பாராட்டுகளை பெற்றதோடு மட்டும்மில்லாமல் அப்பாடலை இசையமைத்த ஏ.ஆர். ரகுமானிடமும் பாராட்டுக்களை பெற்றுத்தந்தது.
தமிழில் வெளியான ‘ என் அவளே அடி என் அவளே' பாட்டின் தெலுங்கு மொழி பாடலை பாடிய அப்பபெண்னின் பாடல் வீடியோ காட்சிகளை ஏ.ஆர். ரஹ்மான் ‘ யாரென அறியவில்லை ஆனால் அழகிய குரல்' என குறிப்பிட்டு இந்த வீடியோ காட்சியை பதிவிட்டார்.
அந்த வீடியோவை பார்க்க;
வாட்ஸாப் மற்றும் முகநூலில் சில தினங்களாக அதிகம் பகிரப்படும் இந்த வீடியோகாட்சிகள். சில நாட்கள் கழித்தே ஏ.ஆர்.ரகுமானிடம் சேர்ந்துள்ளது. அக்காட்சியில் இடம் பெற்ற அப்பெண்னை ஆந்திராவில் உள்ள வாடிசாலேரு கிராமத்தில் வசிக்கும் பேபி என அடையாளம் காணபட்டது.
1 மில்லியன் மக்களுக்களால் பார்க்கப்பட்ட இக்காட்சியை தொடர்ந்து தெலுங்கு சினிமாக்களில் பிரபலமான இசையமைப்பாளர் சல்லூரி கோட்டேஸ்வர ராவ் ( Salluri koteswara rao) அவருக்கு சினிமா வாய்ப்பளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Click for more
trending news