கொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பியில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!
Lucknow: உத்தர பிரதேசம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதில், அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து வேறு எதுற்க்கும் அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியம் இல்லாத அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள், மால்கள், கடைகள் மூடப்பட வேண்டும். பேருந்து உள்ளிட்ட இதர பொதுபோக்குரவத்துக்கும் அனுமதி இல்லை. தொடர்ந்து, வரும் திங்களன்று காலை 5 மணிக்கு இந்த தளர்வு நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மாநிலத்திற்குள் வரும் ரயில்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அதில் வரும் பயணிகள் வீட்டிற்குச் செல்ல சிறப்பு பேருந்துகளைப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விதிவிலக்காக கிராமப்புறங்களில் உள்ள தொழிற்சாலைகள் செயல்பட அனுமதிக்கப்படும். சாலைகள் - நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளின் பணிகளும் நடைபெறும்.
மே மாதத்தில் மத்திய அரசு கட்டுப்பாடுகளை நீக்கத் தொடங்கிய பின்னர் மாநில அரசு ஊரடங்கு அமல்படுத்தப்படுவது முதல் தடவையாகும். மேலும் காசியாபாத் மற்றும் நொய்டாவில் டெல்லியுடனான எல்லைகளை மூடியது.
உத்தரபிரதேசத்தில் இதுவரை 30,000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 20,000க்கும் மேற்பட்ட நோயாளிகள் குணமடைந்துள்ளனர், 845 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
கடந்த வாரம், டெல்லி, ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச முதலமைச்சர்களுடனான கொரோனா வைரஸ் நிலைமையை மறுஆய்வு செய்வதற்காக, மத்திய அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை பரிசோதனையில் கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்டார். உத்தரபிரதேசத்தில் மிகக் குறைந்த சோதனை விகிதங்கள் உள்ளன.