This Article is From Apr 30, 2020

''மே 4-க்கு பின்னர் பல மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்படும்'' - மத்திய அரசு

தெலங்கானாவில் மே 7-ம்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

''மே 4-க்கு பின்னர் பல மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்த்தப்படும்'' - மத்திய அரசு

நாடு முழுவதும் தற்போது 31,787 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் மே 3-ம்தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது
  • மே 4-ம்தேதி பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்
  • புதிய அறிவுறுத்தல் ஓரிரு நாட்களில் வெளியாகும் என உள்துறை அறிவிப்பு
New Delhi:

மே 4-ம்தேதிக்கு பின்னர் நாட்டின் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் இதுதொடர்பான புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-
 

பொது ஊரடங்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான ஆய்வை மேற்கொண்டது. பொது ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கின் பலன் வீணடைந்து விடக்கூடாது என்பதற்காக மே 3-ம் தேதி வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். மே 4-ம் தேதிக்கு பின்னர் பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். 

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருந்தது. சுமார் 5 வார கட்டுப்பாடுகளுக்கு பின்னர் இந்த அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 3-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும். இருப்பினும், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்படவில்லை என்றாலும் ஏற்கனவே பாதித்த மாவட்டங்களில் புதிதாக அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. 

பஞ்சாப் மாநிலத்தில் 375 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் அங்கு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலம் இல்லாத பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தெலங்கானாவில் மே 7-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 94 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

.