ஒரு மாவட்டத்தில் மட்டும் 5,000ஹெக்டருக்கு மேல் (12,000 ஏக்கர்) பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
Ahmedabad: குஜராத் மாநிலத்தில் வெட்டுக்கிளியின் படையெடுப்பினால் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளன. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான தாக்குதல் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூச்சிக் கொல்லி திரவங்களினால் அழிக்க முயற்சித்தாலும் வெட்டுக்கிளியை விரட்ட 4-5 நாட்கள் ஆகுமென தெரிவித்துள்ளனர். விவசாயிகள் தகரங்களை கொண்டு தட்டி வெட்டுக்கிளிகளை விரட்ட முயற்சிக்கின்றனர். உரத்த சத்தங்களைக் கேட்டால் வெட்டுக்கிளி ஓடிவிடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது.
வெட்டுக்கிளி படையெடுப்பினால் 6 மாவட்டத்தின் பயிர்கள் சேதமாகியுள்ளன என்று உள்ளாட்சி அதிகாரி புணாம்சந்த் பர்மர் தெரிவித்தார்.
ஒரு மாவட்டத்தில் மட்டும் 5,000ஹெக்டருக்கு மேல் (12,000 ஏக்கர்) பேரழிவு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். கிட்டத்தட்ட 25 சதவீத வெட்டுக்கிளிகள் பூச்சிக் கொல்லியின் மூலம் கொல்லப்பட்டுள்ளன. இருப்பினும் முற்றிலும் அழிக்க 4-5 நாட்கள் ஆகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளிகள் செல்லும் பாதை ஆரம்பத்தில் பாகிஸ்தானை நோக்கி இருந்தது. காற்றின் திசையிலும் ஈரப்பதத்திலும் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடக்கு குஜராத்தில் அவை வேட்டையை தொடங்கிவிட்டன என்று அதிகாரி தெரிவித்தார்.
வேளாண் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் துறைத்தலைவர் பி.கே.போரட் ஏ.ஏஃப்.பி செய்தி முகமைக்கு பேசிய போது “இது குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கண்ட மிக மோசமான வெட்டுக்கிளி தாக்குதல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வெட்டுக்கிளியின் தீவிரமான படையெடுப்பு 1994இல் காணப்பட்டது. பூச்சிகளை அகற்ற பூச்சிக்கொல்லிகள் 100 டிராக்டர்கள் மூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு அனுப்பப்படும் என்று மாநில விவசாய அமைச்சர் ஆர்.சி. பால்டு தெரிவித்தார்.
விவசாயிகளில் ஒருவர் கிராமத்தில் எல்லாவற்றையும் இழந்து விட்டதாக கவலை தெரிவித்தார்.