சந்திரபாபு நாயுடுவை வரவேற்கும் தேவகவுடா
Bengaluru: மக்களவை தேர்தல் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு பக்க பலமாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேச மக்கள் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இன்று கர்நாடகாவிற்கு சென்ற சந்திரபாபு நாயுடு, அங்கு கர்நாடக முன்னாள் முதல்வரும் மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவக கவுடா மற்றும் அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி ஆகியோரை அவர்களது இல்லத்தில் வைத்து சந்தித்து பேசினார்.
கர்நாடகாவில் சமீபத்தில் 3 மக்களவை மற்றும் 2 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தம் 4 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு சிவமொகா மக்களவை தொகுதியில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வெற்றியால் அக்கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். இந்த நிலையில்தான் மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவ கவுடாவை சந்திபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.
தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி அமைப்பதில் காங்கிரசுக்கு துணையாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். அவர் சமீபத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை சந்திரபாபு நாயுடு சந்தித்த கூட்டணி தொடர்பாக பேசியுள்ளார்.