বাংলায় পড়ুন हिंदी में पढ़ें Read in English
This Article is From Apr 25, 2019

வாரணாசியில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு! பிரியங்கா காந்தி போட்டி?

பிரதமர் மோடியை எதிர்த்து, பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Advertisement
இந்தியா Edited by

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக அஜய் ராயை களமிறக்கிறயுள்ளது காங்கிரஸ்.

Varanasi:

மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தியை போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் பேட்டியிட்ட அஜய் ராயை பெயரை மீண்டும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

வாரணாசியில் பிரமாண்ட பேரணி மேற்கொள்ள உள்ள பிரதமர் மோடியின் பயணத்திற்கு முன்னதாக இந்த அறவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பிரமாண்ட பேரணியை தொடர்ந்து, மோடி நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இதன்மூலம் பிரதமர் மோடியை எதிர்த்து, பிரியங்கா காந்தி போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், வாரணாசி தொகுதியில் மோடிக்கு எதிராக பிரியங்கா களமிறக்கப்படுவாரா என்று கேள்வி எழுப்ப ப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நான் உங்களை சஸ்பென்ஸில் வைக்கிறேன். சஸ்பென்ஸ் ஒன்றும் மோசமான விஷயம் அல்ல என்று அவர் கூறியிருந்தார். இதன் மூலம் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

Advertisement

கடந்த 2014 தேர்தலில் வாரணாசியில் போட்டியிட்ட பிரதமர் மோடியை எதிர்த்து, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிட்டார். இதில் அஜய் ராய் 3ஆவது இடம்பெற்றார். பிரதமர் மோடி, 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை வென்றார். காங்கிரஸ் வேட்பாளர் வெறும் 75,000 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார்.

Advertisement

வாரணாசி தொகுதியில், அகிலேஷ் மற்றும் மாயாவதி கூட்டணி சார்பிலும் இந்த முறை மோடிக்கு எதிராக ஷாலினி யாதவ் என்ற வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார்.

கட்சி கேட்டுக்கொண்டால், வாராணாசியில் தான் போட்டியிடுவேன் என்றும், வெற்றி, தோல்வி என்பதை தான் பொருட்படுத்த போவதில்லை என்று பிரியங்கா காந்தி கூறயிருந்தார்

Advertisement

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் கட்சியில் முதல்முறையாக கடந்த ஜனவரி மாதம் கட்சியில் பதவி வழங்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச் செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.

தொடர்ந்து, அந்த மாநிலத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் தனது தாய் சோனியா காந்தியின் ரேபரேலியில் தொகுதயில் கட்சி தொண்டர்களை சந்தித்தார். அப்போது, தொண்டர்கள் அவரது தாய் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் போட்டியிட வேண்டும் என பிரியங்காவை வலியுறுத்தி வந்தனர்.

Advertisement

அதற்கு, பிரியங்கா காந்தி நான் ஏன் வாரணாசியில் போட்டியிடக்கூடாது என தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர். அன்று முதல், பிரதமர் மோடியின் மக்களவை தொகுதியான வாரணாசியில், பிரியங்கா காந்தி போட்டியிடவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது வந்தது.

Advertisement