This Article is From Mar 20, 2019

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்

பஞ்சாப், ஹரியானா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் மறுத்துவிட்டது: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில், காங்கிரசுக்கு 2 தொகுதிகளை ஒதுக்க ஆம் ஆத்மி தயாராக உள்ளது.

New Delhi:

ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, கூட்டணி தொடர்பாக ஊடகத்தில் வரும் செய்திகள் யாவும் காங்கிரஸ் தலைவர்களால் அரசியல் ஆதாயத்திற்காக செய்பவை எனக் கூறியுள்ளார்.

ஆனால், டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித்துடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது பவாரின் விருப்பமாக இருக்கிறது. இதேபோல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கூட்டணி குறித்து ஆம் ஆத்மி தலைவர்களுடனும் ஆலோசனை செய்தார்.

டெல்லியில் ஆம் ஆத்மி 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், பஞ்சாபில் ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், ஹரியானாவில் ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 தொகுதிகளிலும் போட்டியட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீக்சித் கூறும்போது,

கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போம். கூட்டணி அவசியம் என்று நான் கருதவில்லை. ஆனால் கூட்டணிதான் வேண்டும் என்று கட்சி முடிவு எடுத்தால் அதற்கு நான் கட்டுப்படுவேன்.

தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு காங்கிரஸ் கட்சியிடம் சக்தி உள்ளது. ஆனால், எல்லோரும் கூடிப்பேசி ஒரு முடிவுக்கு வந்தால் அதற்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

2014ஆம் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக டெல்லியில் ஏழு மக்களவைத் தொகுதிகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

.