ஹைலைட்ஸ்
- மார்க்சிஸ்ட் கம்யூ. உடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துகிறது
- வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் திமுக இறங்கியுள்ளது
- 4 தொகுதிகள் மார்க்சிஸ்ட் தரப்பில் கேட்கப்படுவதாக தகவல்
அதிமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள திமுக, கூட்டணியில் சேர வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் இரு கட்சி நிர்வாகிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக தரப்பில் அக்கட்சியை காட்டிலும் பாஜகதான் பலமான கூட்டணியை அமைப்பதற்கு தீவிரம் காட்டி வருகிறது. அந்த கூட்டணியில் அதிமுக – பாமக – பாஜக கட்சிகள் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம், புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாமகவுக்கு 7-ம், பாஜகவுக்கு 5-ம் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதம் 28 தொகுதிகள் இருக்கின்றன. தற்போது தேமுதிகவிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கூடுதல் தொகுதிகளை தேமுதிக கேட்பதால் இழுபறி நீடிக்கிறது.
திமுக தரப்பில் நேற்று காங்கிரஸ் உடனான கூட்டணி இறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் 9 தொகுதிகளிலும், புதுவை தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.
இந்த நிலையில் கூட்டணியில் சேர வருமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. திமுக நிர்வாகிகளுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மார்க்சிஸ்ட் தரப்பில் 4 தொகுதிகள் வரை திமுகவிடம் கேட்பார்கள் என தெரிகிறது. கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகியவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்ப தொகுதிகளாக இருக்கின்றன.
மேலும் படிக்க - “காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி ஒதுக்கீட்டில் முழுதிருப்தி”