This Article is From May 04, 2019

4-ம் கட்ட தேர்தலில் 65.51 சதவீத வாக்குகள் பதிவு!!

கடந்த 2014 மக்களவை தேர்தலின்போது 4-வது கட்டமாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 63.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

4-ம் கட்ட தேர்தலில் 65.51 சதவீத வாக்குகள் பதிவு!!

மொத்தம் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது.

New Delhi:

மக்களவை தேர்தலில் 4-வது கட்டமாக நடத்தப்பட்ட வாக்குப்பதிவில் 65.51 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த தேர்தலை விட அதிகமாகும். 

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 11-ம்தேதி தேர்தல் ஆரம்பித்தது. அன்றைய தினம் 69.5 சதவீத வாக்குகளும், 2-வது கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி நடந்த தேர்தலில் 69.44 சதவீத வாக்குகளும், 3-வது கட்டமாக ஏப்ரல் 23-ம்தேதி நடந்த தேர்தலில் 68.24 சதவீத வாக்குகளும் பதிவாகின. 

இந்த நிலையில் 4-வது கட்டமாக கடந்த 29-ம்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 65.51 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. கடந்த 2014-ல் 4-ம் கட்ட வாக்குப்பதிவின்போது 63.05 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த நிலையில் 2.46 சதவீதம் இந்த தேர்தலில் அதிகரித்திருக்கிறது. 

.