தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக வெற்றி பெறும் என்று கணிப்பு
New Delhi:
இந்தியாவின் பொதுத்தேர்தல் ஏழாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவு நேற்று நடைபெற்று முடிந்தது. இதன் பின் வெளியான கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மை வெற்றி பெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கு மாலத்தீவின் முன்னால் ஜனாதிபதி முஹம்மத் நஷீத் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான அரசாங்கத்துடன் மாலத்தீவு நாடு தொடர்ந்து நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடரும் எனவும் கூறியுள்ளார்.
“இந்திய தேர்தல் முடிவடைந்துள்ளது. பாஜக மற்றும் நரேந்திர மோடிக்கும் வாழ்த்துகள். மாலத்தீவு மக்களும் அரசாங்கமும் பிரதமருடன் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்வார்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
டிசம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு வந்த மாலத்தீவு ஜனாதிபதி சோலிஹ் 1.4 பில்லியன் டாலர் நிதி உதவி அளித்துள்ளார்.
வாக்கு எண்ணிக்கை நாளன்று கணிசமாக உயரம் என நஷீத் தெரிவித்துள்ளர்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பானமை பெற்று வெற்றி பெறும் என்று சிஎன்என் , நியூஸ் 18, ஐபிஎஸ்ஓஎஸ், இந்தியா டூடே -அக்ஸிஸ் மை இந்தியா ஆகிய ஊடகங்கள் 300 இடங்களை பெற்று பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன.