Read in English
This Article is From May 10, 2019

வெயிலிலிருந்து தப்பிக்க பிரசாரத்திற்கு 'டூப்ளிகேட்டை காம்பீர்' பயன்படுத்துகிறார்: ஆம் ஆத்மி!!

தனது குற்றச்சாட்டு தொடர்பாக புகைப்பட ஆதாரத்தை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. டெல்லி அரசியலில் கடந்த சில நாட்களாக கவுதம் காம்பீர் பரவலாக பேசப்பட்டு வருகிறார்.

Advertisement
இந்தியா Edited by

துண்டுச் சீட்டு விவகாரம் காம்பீருக்கு எதிராக பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

New Delhi:

வெயில் கொமையில் இருந்து தப்பிப்பதற்காக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் டூப்ளிகேட் நபரை பயன்படுத்துகிறார் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக புகைப்படத்தையும் அக்கட்சி வெளியிட்டிருப்பதால் விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது. 

ஆம் ஆத்மியின் மூத்த தலைவரும் டெல்லியின் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியாதான் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

ட்விட்டரில் படத்தை வெளியிட்டுள்ள மணிஷ், 'டூப்ளிகேட் நபரை சினிமாக்களின் சண்டைக் காட்சியின்போது பயன்படுத்துவார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்போம். கிரிக்கெட்டில் ரன் எடுக்க ஓட முடியவில்லை என்றால் பேட்ஸ்மேனுக்கு உதவியாக ரன்னர் ஒருவரை பயன்படுத்துவார்கள். ஆனால் முதன் முறையாக தேர்தல் பிரசாரத்திற்கு டூப்ளிகேட் ஒருவர் பயன்படுத்தப்படுவதை டெல்லியில்தான் பார்க்கிறோம்' என்று கூறியுள்ளார். 

Advertisement

டெல்லியில் 6-கட்ட மக்களவை தேர்தலாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ம்தேதி நடக்கிறது. 
முன்னதாக துண்டுப்பிரசுர விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் கூறியிருந்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, தன்னை விமர்சித்து பாலியல் ரீதியாக கவுதம் காம்பீர் லட்சக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார் என்று குற்றம் சாட்டினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு காணப்பட்டது.

இந்த விவகாரத்தை காம்பீரை ஆம் ஆத்மி தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதற்கெல்லாம் பதிலடி கொடுத்துள்ள காம்பீர், தன்மீதான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு சவால் விடுத்துள்ளார். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தேர்தலில் போட்டியிடுவதை விட்டு விலகிக் கொள்வதாக கூறியுள்ள காம்பீர், நிரூபிக்க தவறினால் ஆம் ஆத்மி தலைவர்கள் அரசியலை விட்டு விலகுவார்களா என்று கேள்வி எழுப்பினார்.
 

Advertisement
Advertisement