This Article is From May 13, 2019

சந்திர சேகர ராவிடம் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்படி வலியுறுத்திய ஸ்டாலின்!!

பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார்.

சந்திர சேகர ராவுக்கும் - ஸ்டாலினுக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரமாக சந்திப்பு நடைபெற்றது.

Chennai:

கூட்டாட்சி அமைக்க ஆதரவு கேட்டு வந்த தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவிடம், காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத கூட்டாட்சியை அமைக்கும் முயற்சியில் சந்திர சேகர ராவ் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் ஒவ்வொரு மாநில முதல்வர்களை சந்தித்து ஆதரவு திரட்டி விருகிறார். கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனை அவர் சந்தித்து பேசினார். ஸ்டாலினை சந்திக்க வந்தபோது அவர் தேர்தல் பிரசாரத்தில் இருந்ததால் சந்திக்க முடியாமல் போனது. 

அந்த நேரத்தில் பாஜக தூதராக சந்திர சேகர ராவ் வந்தார். இதனால்தான் ஸ்டாலின் அவரை சந்திக்கவில்லை என்றெல்லாம் தகவல் பரவியது. இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் - சந்திர சேகர ராவ் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. 

அப்போது கூட்டாட்சி அமைக்க ஸ்டாலினிடம் ராவ் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு ஸ்டாலின் தரப்பில் சந்திர சேகர ராவ் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்கள் எவரையும் சந்திக்காமல் தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவருமான சந்திர சேகர ராவ் புறப்பட்டுச் சென்று விட்டார். 

சந்திர சேகர ராவின் முயற்சிக்கு பெரிய அளவில் பலன் ஏதும் கிடைக்கவில்லை. முன்னதாக உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை ராவ் சந்திக்க முயன்றார். ஆனால் சந்திப்பு நடக்கவில்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் இருந்தும் நல்ல பதில் கிடைக்கவில்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும்தான் சந்திர சேகர ராவின் ஐடியாவுக்கு ஓகே சொல்லியுள்ளார். 

.