This Article is From Mar 26, 2019

தமிழகம் மற்றும் புதுவையில் இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது.

Advertisement
இந்தியா Written by

2019 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில், முதல்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் 2-ம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்தத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழிசை, கனிமொழி உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பலரும் நேற்றே தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டனர்.

இந்நிலையில், இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், பலர் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வேட்புமனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

Advertisement
Advertisement