This Article is From Apr 18, 2019

மக்களவை தேர்தல் : வீல்சேரில் வந்து வாக்களித்த 105 வயது பாட்டி!

Lok Sabha Election: நாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக தமிழகம், புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மக்களவை தேர்தல் : வீல்சேரில் வந்து வாக்களித்த 105 வயது பாட்டி!

Election 2019: 2-வது கட்ட தேர்தலில் மகாராஷ்டிராவிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Lok Sabha Election 2019: மக்களவை தேர்தலையொட்டி 105 பாட்டி ஒருவர் வீல் சேரில் வந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார். இது வாக்காளர்கள் மத்தியில் வாக்களிக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 

நாடு முழுவதும் இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவு 95 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, புதுவை உள்ளிட்ட 11 மாநிலங்கள் வருகின்றன. 

இந்த தேர்தலில் வாக்களித்த அதிக வயதுடையவர் என்ற பெயர் மகாராஷ்டிர மாநிலம் லாத்தூரை சேர்ந்த கவாய்பாய் காம்ப்ளி என்ற பாட்டிக்கு கிடைத்துள்ளது. 105 வயதான அவர், வீல் சேரில் தனது குடும்பத்துடன் வந்து ஹராங்குல் வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். 

இதேபோன்று ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 80 வயது நோயாளி ஒருவர் மருத்துவமனையில் இருந்து நேரடியாக வாக்குச் சாவடிக்கு வந்து தனது வாக்கை செலுத்தினார். பீகாரில் 90 வயது பாட்டிகள் 2 பேரும், அசாமில் 104 வயதான சரகுனா பிபி என்ற பாட்டியும் வாக்களித்துள்ளனர். 

இவர்களில் சரகுனா ஒரு வாக்கை கூட தனது வாழ்நாளில தவற விட்டதில்லை என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 7 கட்டமாக மொத்தம் 543 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது முடிவுகள் மே 23-ம்தேதி வெளியாகின்றன. 

.