மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இன்று தேர்தலை சந்திக்கும் மாநிலங்கள்: அசாமில் நான்கு தொகுதிகள், பிகாரில் ஐந்து தொகுதிகள், சத்தீஸ்கரில் ஏழு தொகுதிகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியில் ஒரு தொகுதி, டாமன் மற்றும் டயூவில் ஒரு தொகுதி, கோவாவில் இரண்டு தொகுதிகள், குஜராத்தில் 26 தொகுதிகள், கர்நாடகத்தில் 14 தொகுதிகள், கேரளாவில் 20 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 14 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்திர பிரதேசத்தில் 10 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் ஐந்து தொகுதிகள்.
ஏழு கட்டங்களாக நடக்கும் தேர்தலின் முடிவுகள் மே மாதம் 23 ஆம் தேதி அறிவிக்கப்படும்.
கேரளா மாநிலத்தில் நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வந்த இரு முதியவர்கள் சுருண்டு விழுந்து மரணம் அடைந்தனர். இதேபோல், கேரளா மாநிலம் வடகரா தொகுதியில் விஜயி (65), என்ற மூதாட்டி சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
இதில், இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில், ஓட்டு போடுவதற்காக வரிசையில் நின்றிருந்த தியாருல் கலாம் (வயது 55) என்ற வாக்காளர் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
மேற்குவங்கத்தில் வாக்குப்பதிவின்போது ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டது. குறிப்பாக முர்ஷிதாபாத் மாவட்டம் பாலிகிராம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அகமதாபாத்தில் உள்ள நரன்பூரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த அவர், இந்த ஜனநாயக திருவிழாவில் அனைவரும் பங்கேற்க வேண்டும், பெரும் அளவில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மக்களவைத் தேர்தலில் குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் பாஜக தலைவர் அமித்ஷா, அகமதாபாத்தில் இன்று தனது மனைவி சோனால் ஷா உடன் வாக்குப்பதிவு செய்தார்.
பயங்கரவாதத்தின் ஆயுதம் வெடிகுண்டு என்பதை போல ஜனநாயகத்திற்கு வலிமை சேர்ப்பது வாக்களர் அட்டை என்றார். மேலும், எனது சொந்த மாநிலமான குஜராத்தில் வாக்களித்ததன் மூலம் நான் அதிஷ்டசாலி ஆனேன் என்றார்.
வாக்களித்தப்பின் பிரதமர் நரேந்திர மோடி தனது மை வைத்த விரலை உயர்த்தி காட்டியபடி சிறுது தூரம் நடந்து சென்று மக்களுக்கு கையசைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெடிகுண்டுகளை விட வாக்காளர் அட்டைகள் வலிமை வாய்ந்தது.
தொடர்ந்து, அங்கிருந்து திறந்த ஜீப்பில் மக்களுக்கு கையசைத்தபடி ஊர்வலம் போல் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட அகமதாபாத்தில் ராணிப்பில் உள்ள நிஷான் உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, தனது வாக்கினை பதிவு செய்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். அங்கு காந்திநகரில் உள்ள தனது தாயின் இல்லத்திற்கு சென்ற பிரதமர் மோடி, தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார்.
ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் வாக்குபதிவு துவங்கியது
லோக்சபா தேர்தலில் முதல் முறையாக குஜராத்தின் காந்திநகரில் அமித் ஷா போட்டியிடுகிறார்
மூன்றாம் கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு துவங்கியது
இன்று நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் பாஜக கட்சியின் தலைவர் அமித் ஷா குஜராத்தின் காந்திநகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
15 மாநிலங்களில் 117 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.