Elections 2019 Phase 5 Voting: மேற்கு வங்காளத்திலும் இன்று தேர்தல் நடைபெறுகிறது
2019 மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. ஏழு மாநிலங்களில் 51 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இன்று தேர்தல் நடக்கும் இடங்கள்: பிகாரில் 5 தொகுதிகள், ஜம்மூ காஷ்மீரில் 2 தொகுதிகள், ஜார்கண்டில் 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகள், ராஜஸ்தானில் 12 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 7 தொகுதிகள்.
ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதி முடிகிறது. மே 23 ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படும்.
ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராஜ்நாத் சிங் ஆகியோர் இன்று தேர்தலை சந்திகின்றனர்.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் தான் தாக்கப்பட்டதாக கூறினார்
ராஜவர்தன் சிங் ரத்தோர் தன் குடும்பத்தினருடன் வாக்களித்த பின் உள்ள புகைப்படம்
5-ம் கட்ட தேர்தல்: திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக வேட்பாளர், வாக்களர்களிடம் வரம்புமீறி நடந்து கொள்வதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளது.
மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்கா, ஹசரிபாக் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் கோபால் சாகு மற்றும் சிபிஐ புபனேஷ்வர் பிரசாத் மேதாவுக்கு எதிராக களம் காண்கிறார். சின்கா, வாக்களிக்க வரிசையில் காத்திருந்தபோது.
உத்திரபிரதேசத்தில் வாக்களித்தவர்கள்
ஜம்மூ காஷ்மீரில் உள்ள ரக்மோவில் வெடி எரியப்பட்டது. யாரும் காயப்படவில்லை. தேர்தலில் இவ்வாறு நடப்பது இதுவே முதல் முறையாகும்.
பாஜக வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகாரர்களால் தாக்கப்பட்டதாக தகவல்
உத்திரபிரதேசத்தின் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வாக்களித்தார். 'அனைவரும் புத்திசாலிதனமாக வாக்களிக்க வேண்டும்' என அவர் கேட்டு கொண்டார்.
ரே பரேலியில் இரண்டு வாக்குசாவடிகளிலும் அமேத்தியில் ஒரு தொகுதியிலும் வாக்குபதிவு இன்னும் துவங்கவில்லை.
கிராமபுற ஜெய்பூர் தொகுதியில் பாஜக கட்சி சார்பாக மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பாக தற்போதைய எம்.எல்.ஏ வும் முன்னாள் ஒலிம்பிக் வீராங்கனையுமான கிருஷ்ணா பூனியா போட்டியிடுகிறார்.
ரம்ஸான் பண்டிக்கை இருந்தாலும், வாக்களிக்கும் நேரத்தை மாற்ற முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் வாக்களித்தார். லக்னோ மக்களவை தேர்தலில் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார்.
ஜம்மூ மற்றும் காஷ்மீரின் சோப்பியானில் வாக்குசாவடியாக இரண்டு பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளான சோப்பியான் மற்றும் புல்வாமாவில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
முன்னாள் மந்திரி யஷ்வந்த் சின்ஹா, தன் மனைவியுடன் வாக்களிக்க வரிசையில் நிற்கிறார்.
மேற்கு வங்காளத்தில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வாக்களிக்க காத்திருக்கும் கூட்டம்
அமேத்தி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிரிதி இராணி போட்டியிடுகிறார்.
2004 முதல் இந்த தொகுதியில் ராகுல் காந்தியே வென்றுள்ளார். ஆனால் கடந்த முறை வாக்கு வித்தியாசம் 1 லட்சத்திற்கு மேல் மட்டுமே. அதுவே பிந்திய தேர்தலில் 3 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது