காங்கிரஸின் இதயத்தின் உங்கள் குடும்ப ரகசியத்தை வெளியில் சொன்னதற்காக நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்.
New Delhi: சீக்கிய கலவரம் குறித்து கருத்து தெரிவித்ததற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா வெட்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இன்று பிரதமர் மோடி “சீக்கிய கலவரம் குறித்து நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்” என்று ராகுல் காந்தியை சாடியுள்ளார்.
சீக்கிய கலவரம் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பித்ரோடா நடந்தது நடந்து விட்டது என்று கூறினார். இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி சாம் பித்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டித்திருந்தார்.
பஞ்சாப் மாநிலம் பாத்திண்டாவில் பிரச்சார பேரணியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி “அரேய் நாம்தார், நீ தான் வெட்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். “ராகுல் காந்தி தனது குருவிடம் நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். உங்கள் வழிகாட்டியை திட்டுவதாக பாசாங்கு செய்கிறீர்களா...? காங்கிரஸின் இதயத்தின் உங்கள் குடும்ப ரகசியத்தை வெளியில் சொன்னதற்காகவா அவர் வெட்கப்பட வேண்டும். நீங்கள் தான் வெட்கப்பட வேண்டும்.” என்று கூறினார்.
1984-ல் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு முன்பாக சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவிலுக்குள் புகுந்து பிரிவினைவாதிகளை இந்திய ராணுவம் கொன்று குவித்தது. இதற்கு ஆப்பரேஷன் ப்ளு ஸ்டார் என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்திரா காந்தி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதனை செய்யும்படி ராஜீவ் காந்தியின் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.