This Article is From Apr 18, 2019

மும்பையில் தேர்தல் ஆணையம் ரூ. 11 கோடி பறிமுதல் செய்தது

தேர்தல் ஆணையம் வருமான வரித்துறை மூலமாக நாடு முழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது.

மும்பையில் தேர்தல் ஆணையம் ரூ. 11 கோடி பறிமுதல் செய்தது

மார்ச் 10 தேதி முதல் நாடு தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைக்கு கீழ் வந்து விட்டது.

Mumbai:

மும்பை சியான் பகுதியில் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படை ரூ. 11.85 கோடி பறிமுதல் செய்துள்ளது. மகாராஷ்டிராவின் விதார்பா, மராத்வாடா ஆகிய  10 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 

நாடுமுழுவதும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மார்ச் 10 தேதி முதல் நாடு தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைக்கு கீழ் வந்து விட்டது. 

வருமானவரித்துறை ஆணையம் மூலமாக நடத்தப்பட்ட சோதனையில் தமிழ்நாட்டில் 135 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக தலைவரின் வீட்டில் 11.48 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதையொட்டி தேர்தல் ஆணையம் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைத்து விட்டது. 

தேர்தல் ஆணையம் வருமான வரித்துறை மூலமாக நாடுமுழுவதும் சோதனைகளை நடத்தி வருகிறது. 

.