This Article is From Apr 23, 2019

''ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 22 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பு'' : ராகுல் காந்தி உறுதி

ராஜஸ்தான் மாநிலம் துங்கார்பூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். கடந்த 5 ஆண்டுகாள மோடி அரசு அநீதி இழைத்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

''ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 22 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பு'' : ராகுல் காந்தி உறுதி

ராஜஸ்தானில் ஏப்ரல் 29 மற்றும் மே 6- ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Dungarpur:

ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் 22 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

மக்களவை தேர்தல் ராஜஸ்தானில் 2 கட்டங்களாக ஏப்ரல் 29 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த பாஜகவை அகற்றி விட்டு காங்கிரஸ் கட்சி அங்கு ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அங்கு மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது

இதையொட்டி துங்கார்பூர் நகரில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது-

காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த ஓராண்டுக்குள் 22 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். கடந்த 5 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு மோடி அரசு அநீதி இழைத்து வருகிறது. இதற்கு காங்கிரஸ் ஆளும் அடுத்த 5 ஆண்டுகளில் நீதி கிடைக்கும். 

குறிப்பாக பழங்குடியின மக்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாக அநீதி இழைக்கப்படுகிறது. மோடி எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. 15-20 பேருக்கு மட்டுமே மோடி மத்திய அரசை நடத்தி வருகிறார். 
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 

.