Elections 2019: கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தனது சொத்தின் மதிப்பு 45 சதவீதம் அதிகரித்திருப்பதாக வசந்த குமார் கூறியுள்ளார்.
Lok Sabha Election 2019: 2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் 95 மக்களவை தொகுதிகளில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் எச். வசந்த குமார்தான் பணக்கார வேட்பாளர் என தெரிவந்துள்ளது. இந்த விவரங்களை ஏ.டி.ஆர். அமைப்பு வெளியிட்டுள்ளது.
வசந்த குமார் தனது வேட்பு மனுவில் தனக்கு ரூ. 412 கோடி சொத்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தனது சொத்து மதிப்பு 45 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
வசந்த் டிவி என்ற தொலைக்காட்சியை நடத்தி வரும் வசந்த குமார் நாங்குனேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக பீகார் மாநிலம் புர்னியா மக்களவை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் உதய் சிங், பணக்கார வேட்பாளராக இருக்கிறார்.
அவருக்கு ரூ. 340 கோடி அளவுக்கு சொத்து இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த இடத்தில் கர்நாடகாவின் பெங்களூரு ஊரக தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டிகே சுரேஷ் 338 கோடி ரூபாய் சொத்தை உடையவராக இருக்கிறார். இவரும் காங்கிரசை சேர்ந்தவர்.
பிரபல நடிகையும், பாஜக எம்.பி.யுமான ஹேமமாலினிக்கு ரூ. 250 சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக 95 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.