This Article is From Apr 09, 2019

பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் பாஜகவிற்கு ஆதரவாக இருக்கிறதா என்பதை தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்திற்கு தடை இல்லை: உச்சநீதிமன்றம்

தேர்தலை முன்னிட்டு பி.எம் நரேந்திர மோடி திரைப்படம் ஏப்.11 தேதி வெளியிட திட்டமிடப்பட்டது.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பி.எம்.நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிட தடைக்கோரிய காங்கிரஸ் தலைவரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘பி.எம்.நரேந்திரமோடி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது. மேலும், பெரும் பிரச்சனையல்லாத இந்த விஷயத்திற்காக நீதிமன்றத்தின் பெரும்பான்மையான நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

மேலும், தேர்தல் நடைபெறும் சமயத்தில் இந்த படம் வெளியாவது விதிமீறலா என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த திரைப்படம் ஆளும் பாஜவுக்கு ஆதரவாக உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதேபோல், 'பிஎம் நரேந்திரமோடி' திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழே தராத நிலையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா மற்றும் சஞ்சீவ் கானா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.

பாஜக பிரமுகர்கள் நான்கு பேரே இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் என்றும், தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

‘பி.எம்.நரேந்திரமோடி' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எதிர்ப்பு மற்றும் நீதிமன்ற வழக்குகள் காரணமாக படத்தை வெளியிடுவது ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு நடிகர் விவேக் ஓபராய் தனது டிவிட்டர் பதிவில்,

உங்கள் அனைவரின் ஆசியுடனும், ஆதரவுடனும் இன்று உச்சநீதிமன்றத்தில் வெற்றியை பெற்றுள்ளோம், ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை ஆதரிப்பதற்காக உங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். வரும் 11ஆம் தேதி படம் வெளியாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

.