This Article is From Mar 30, 2019

‘’எங்களுக்கு மோடி இருக்கிறார்; உங்களுக்கு யார்?‘‘ : எதிர்க்கட்சிகளுக்கு உத்தவ் கேள்வி!!

இந்துத்துவா எங்கள் மூச்சுக்காற்று என்று பால் தாக்கரே கூறினார். அவர் வழி நடப்போம் என்று உத்தவ் தாக்கரே பேசியுள்ளார்.

‘’எங்களுக்கு மோடி இருக்கிறார்; உங்களுக்கு யார்?‘‘ : எதிர்க்கட்சிகளுக்கு உத்தவ் கேள்வி!!

பாஜக உடனான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக உத்தவ் கூறியுள்ளார்.

Gandhinagar:

பாஜக உடனான கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ‘'எங்களுக்கு மோடி இருக்கிறார்; உங்களுக்கு யார்?‘‘ என்று எதிர்க்கட்சிகளை கேள்வி எழுப்பியுள்ளார்.

குஜராத்தின் காந்தி நகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்கு பாஜக தலைவர் அமித் ஷா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது-

பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தன. அவை எல்லாம் முடிவுக்கு வந்து விட்டன. அனைத்து சர்ச்சைகளும் முடிவுக்கு வந்து விடும். இந்துத்துவாவும், தேசியவாதமும்தான் சிவசேனா மற்றும் பாஜகவின் கொள்கைகள்.

என்னுடைய தந்தை பால்தாக்கரே இந்துத்துவாதான் மூச்சு என்று அடிக்கடி கூறுவார். அது இல்லாமல் எங்களால் உயிர் வாழ முடியாது. பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவதை பல கட்சிகள் கொண்டாடுகின்றன.

அந்த கொண்டாட்டங்கள் இன்றைக்கு முடிவுக்கு வந்திருக்கும். 56 கட்சிகள் கைகளை கோர்த்து நின்றார்கள். ஆனால் அவர்களது மனது ஒன்றுபடவில்லை. எங்களுக்கு மோடி இருக்கிறார். எதிர்க்கட்சிகளாகிய உங்களுக்கு யார் இருக்கிறார்?. உங்களது பிரதமர் வேட்பாளர் யார்? உங்களில் ஒவ்வொருவரும் பிரதமர் பதவிக்கு சண்டையிடுகிறீர்கள்.

இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.

.