மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ வரலாம்
Kolkata: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசு 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருக்காது என்று பாஜக தலைவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.
பாஜக தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா “ வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தல் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்குள் நடத்தப்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய தேர்தலில் பாஜகவின் பங்கு மகத்தான வெற்றிக்கு மேற்கு வங்கம் முக்கிய பங்களிப்பாக இருந்தது என்று தெரிவித்தார்.
ஆளும் கட்சி மேற்கு வங்கத்தில் 42 தொகுதியில் 22 தொகுதிகளை மட்டுமே பெற்றது. 18 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றியினை பெற்றது.
பாஜகவின் வாக்கு சதவீதம் 17 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
திரிணாமூல் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 34லிருந்து 22 சதவீதமாக குறைந்துள்ளது.
ராகுல் சின்ஹா மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ வரலாம். திரிணாமூல் காங்கிரஸ் மீது மக்களுக்கு அதிருப்தி உள்ளது. திரிணாமூல் போலீஸை வைத்து ஆட்சி நடத்துகிறது என்று கூறினார்.
திரிணாமூல் காங்கிரஸின் இரண்டு எம்பிகள் மற்றும் 60 கவுன்சிலர்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்று கைலாஷ் விஜயவர்கியா கூறினார்.
உண்மையறிந்தததில் ஆறு கவுன்சிலர்கள் மட்டுமே பாஜகவில் இணைந்ததாக கூறப்படுகிறது. மற்றவர்கள் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சியிலிருந்து வந்தவர்கள் என்றனர்.
விஜயவர்கியா மம்தா பானர்ஜிக்கு வாழ்த்துகள் 2021 வரை முதல்வராக இருக்கலாம். ஆனால் அவருடைய கர்மா இந்த மாதிரி வேலை செய்தால் யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் இதை இடைக்கால பின்னடைவு என்றே கூறுகின்றனர்.