மோடி மற்றும் அமித் ஷா பலமுறை மேற்கு வங்கத்தில் பொதுக் கூட்டம் நடத்தியுள்ளனர்.
ஹைலைட்ஸ்
- திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும் பாஜக 18 இடங்களிலும் முன்னிலை
- இடதுசாரிகள பலரும் பாஜகவில் இணைந்து விட்டனர்.
- 2014 ஆம் ஆண்டு தேர்தலில் 2 இடங்களை மட்டுமே பெற்றது
New Delhi: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை இலக்கத்தில் முன்னிலையில் உள்ளது. மம்தா பானர்ஜியின் தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தேர்தலில் 22 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. 42 தொகுதிகளில் 22 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. பாஜக 18 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மேற்குவங்கத்தில் மாநிலத்தில் பாஜக பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை.
கடந்த சில ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் பாஜக வெகுவாக முன்னேறி வருகிறது. 2014ல் பாஜக மேற்கு வங்கத்தில் 2 இடங்களை மட்டுமே பெற்றது.
கடந்த இரண்டு வருடங்களாக பாஜக மேற்கொண்ட முயற்சிகள் மாநில அரசுடன் பல மோதல்களை ஏற்படுத்தியது. குறிப்பாக மதம் குறித்தான மோதல்கள் அதிகமாகவே உள்ளது.
இதேபோல், 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தன்னுடைய இடத்தை பெற பாஜக முயற்சி செய்து வருகிறது.
அரசியல் ஆய்வாளர்கள் இடது வலதாக மாறி வருகிறது என்று கூறி வருகின்றனர். பல இடதுசாரிகள் மற்றும் நிர்வாகிகள் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
முதலமைச்சர் சிறுபான்மையினருக்கான கொள்கைகளை அவர்களின் பிரச்சனைகளின் மீதும் எந்தவொரு கவனமும் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்ப்பட்டு வருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் வங்காளத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான பேரணிகள் நடத்தினர். ஃபனி புயலை ஒட்டி மம்தா பானர்ஜி மோடியை ‘காலாவதியான பிரதமர்'எஎன்று கூறி அவரின் அழைப்புக்கு பதிலளிக்க மறுத்து விட்டார்.
மேற்கு வங்கத்தில் நடக்கும் வன்முறைக்கு பாஜகவே காரணம் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.