Election results: தேர்தல் பிந்தைய முடிவுகள் பாஜகவிற்கு ஆதரவாகவே உள்ளது
New Delhi:
அடுத்த ஐந்து ஆண்டுகள் நம் நாட்டை யார் ஆட்சி செய்ய போகிறார்கள் என்பது இன்று தெரிந்துவிடும். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத தேர்தலாக இது திகழ்ந்தது. பாஜக தான் ஆட்சி செய்ய போகிறது என பல கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் பல நேரங்களில் கருத்து கணிப்புகள் உண்மையாகுவதில்லை. 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கவுள்ளது.
பாய்ண்ட்கள்
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுவஷ் பாரத் (Swachh Bharat), மேக் இன் இந்தியா (Make in India) போன்ற பல திட்டங்களை அறிமுகம் செய்தார் பிரதமர் மோடி. ஆனால் பொருளாதார வீழ்ச்சி, வேலைவாய்ப்புகள் உருவாக்க தவறியது, விவசாய பிரிவில் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு மோடியின் அரசை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர்.
கடந்த சில மாதங்களாக நடந்த இந்த தேர்தல் பிரசாரத்தில் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. பிப்ரவரி 14 ஆம் தேதி ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துவங்கியது.
தேசியம், தேசிய பாதுகாப்பை சுற்றியே பாஜகவின் தேர்தல் பிரசாரம் இருந்தது. ரபேல் விவகாரம், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் சுற்றியே காங்கிரஸ் கட்சியின் பிரசாரம் அமைந்தது.
இந்த முறை தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் ஆணையத்திடம் பிரதமர் மோடி, அமித் ஷா மீது முறையிடப்பட்டது. ஆனால் அனைத்து முறையும் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்து.
மூன்று பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில் 2:1 என்றே முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனால் அஷோக் வர்மா தேர்தல் ஆணையத்தின் மீட்டிங் கலந்து கொள்ளவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய இந்தியாவில் இருக்கும் 3 மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிவாகை சூடியது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரையிறுதியாக அந்தத் தேர்தல் பார்க்கப்பட்டது. இந்த முறை மக்களவை தேர்தலுக்கு, காங்கிரஸ் இந்த அனைத்து மாநிலங்களிலும் தனியாக போட்டியிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பாஜக தலைவர் அமித்ஷா, சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அப்னா தளம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொடர்ந்து பேசி தேசிய ஜனநாகயக் கூட்டணியை உறுதிபடுத்தினார். அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள், ஓரணியாக திரளவில்லை.
உத்தர பிரதேசத்திலும் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாயாவதி, தேர்தலில் தன்னிச்சையாக போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் கூட்டணி அமையாமல் போனது. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், தனியாக போட்டியிட்டது.
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு, பாஜக கடும் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. அங்கு மொத்தம் இருக்கும் 42 தொகுதிகளில் 23 இடங்களை பாஜக, கைப்பற்றப் பார்க்கிறது.
விவிபேட் இயந்திரத்தை, வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும் முன்னர் ஒப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 5 விவிபேட் இயந்திரங்களில், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் ஒப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a comment