திரிணாமூல் காங்கிரஸ் 23 இடங்களிலும் பாஜக 17 இடங்களையும் பெற்றுள்ளது. (File)
Kolkata: இந்த தேர்தலில் மேற்கு வங்கத்தில் பாஜக கிட்டத்தட்ட ஆளும் கட்சியை நெருங்கும் வகையில் இடங்களைப் பிடித்துள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் 23 இடங்களிலும் பாஜக 17 இடங்களையும் பெற்றுள்ளது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி போட்ட ட்விட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
“வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் ஆனால் தோல்வியடைந்தவர்கள் தோல்வியாளர்கள் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதன் பின் கருத்துகளை பகிர்ந்து கொள்வோம். விவிபாட் ஒப்புகை சீட்டுடன் கூடிய வாக்கு எண்ணிக்கையும் முடிவடையட்டும்” என்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார்.
கடந்த தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் 34 இடங்களையும் பாஜக 2 இரண்டு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.