தேர்தல் தேதி அறிவித்த உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.
New Delhi: மக்களவைத் தேர்தல் தேதிகளை இன்று மாலை 5 மணி அளவில் அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். டெல்லியில் இருக்கும் விக்யான் பவனில், செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்தல் தேதி அறிவிப்புகளை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா.
அவர் பேசுகையில், 'தேர்தல் ஆணையம், தேர்தல் நேர்மையாக வெளிப்படைத்தன்மையோடு நடப்பதை உறுதி செய்யும். தேர்தலின் வீச்சும் அளவும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே போகிறது. தேர்தல் சுமூகமாக நடக்க பல்வேறு துறையினரிடம் நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த முறை சென்ற முறையை விட வாக்குச்சாவடிகளின் விகிதம் 10 சதவிகிதம் அதிகமாக இருக்கும், அனைத்து இடங்களிலும் விவிபிஏடி இயந்திரங்கள் பொருத்தப்படும்.
7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும். முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும். 7-ம் கட்ட தேர்தல் 19 ஆம் தேதியும் நடைபெறும். அனைத்து கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 23 ஆம் தேதி நடைபெறும்' என்றார்.
வரும் ஜூன், 3 ஆம் தேதியுடன், தற்போதைய லோக்சபாவின் பதவிக் காலம் முடிவடைகிறது.
தேர்தல் தேதி அறிவித்த உடன், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், மத்திய அரசு, மேற்கொண்டு எந்தத் திட்டங்களையும் அறிவிக்க முடியாது.
மொத்தம் இருக்கும் 543 லோக்சபா தொகுதிகளுக்கும் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுமார் 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கும்.
லோக் சபா தேர்தல் குறித்த லைவ் அப்டேட்ஸ் இதோ:
கர்நாடகாவில் பிரசாரத்தின்போது மர்ம பெட்டி மோடியின் ஹெலிகாப்டரில் இருந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
தமிழ்நாட்டை தமிழர்கள்தான் ஆள வேண்டும்: சேலத்தில் ராகுல் காந்தி பரபரப்பு பிரசாரம்!
தமிழகத்தில் 5.99 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ல் இடைத்தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக
7 கட்டங்களில் நடக்கும் மக்களவைத் தேர்தல் குறித்த விரிவான தகவல் இதோ:
ஜனநாயகத்தின் பண்டிகையான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் இந்தியர்கள் ஆர்வமாக வந்து வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த முறை வரலாற்றுச் சிறப்புமிக்க வாக்கு சதவிகிதம் பதிவாகும் என நான் நம்புகிறேன். முதல் முறை வாக்கு செலுத்துவோர்க்கு நான் சிறப்பு வேண்டுகோள் விடுக்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்
ஜம்மூ காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் இப்போது நடத்தப்படாது: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
இரண்டாம் கட்ட தேர்தல்
அசாம்- 5
பிகார்- 5
சத்தீஸ்கர்- 3
ஜம்மூ காஷ்மீர்- 2
கர்நாடகா- 14
மகாராஷ்டிரா- 10
மணிப்பூர்- 1
ஒடிசா- 5
தமிழ்நாடு- 39
திருப்புரா- 1
உத்தர பிரதேசம்- 8
மேற்கு வங்கம்- 3
புதுச்சேரி- 1
ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும்
ஏப்ரல் 11-ல் நடக்கும் முதல் கட்ட லோக்சபா தேர்தலில் 22 மாநிலங்கள் வாக்களிக்கும்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
4வது கட்ட தேர்தல் 29 ஏப்ரலிலும், 5வது கட்ட தேர்தல் மே 6 ஆம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 12 ஆம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் 19 ஆம் தேதியும் நடைபெறும். அனைத்து கட்ட தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே மாதம் 23 ஆம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையர் தகவல்
முதல் கட்ட லோக்சபா தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி நடைபெறும்; இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட லோக்சபா தேர்தல் 18 மற்றும் 23 ஏப்ரலில் நடைபெறும்: தேர்தல் ஆணையர்
கூகுள், ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட அனைத்து தளங்களும், அரசியல் கட்சி விளம்பரங்களுக்கும் சான்றிதழ் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளன: தேர்தல் ஆணையர்
7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும்: தேர்தல் ஆணையர் சுனில அரோரா அறிவிப்பு
தேர்தலில் விதிமுறைகள் மீறப்படுவது குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுடைய ரகசியங்கள் பாதுகாக்கப்படும். அவர்களுக்கு எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் தெரிவிக்கப்படும்: தலைமை தேர்தல் ஆணையர்
இந்த லோக்சபா தேர்தலில் 90 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியானவர்களாக இருப்பார்கள். அதில் 1.5 கோடி பேர் 18 முதல் 19 வயதுக்குள் உள்ளவர்களாக இருப்பர்: தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில், கேமராக்கள் பொருத்தப்பட்டு வீடியோ பதிவு செய்யப்படும்: தேர்தல் ஆணையர் அரோரா
இந்த முறை தேர்தலில், வாக்காளர்கள், வேட்பாளர்களின் படத்தைப் பார்க்க முடியும். இந்த முறை 10 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கும். இது சென்ற முறை 9 லட்சமாக இருந்தது: தேர்தல் ஆணையர்
இந்த முறை சென்ற முறையை விட வாக்குச்சாவடிகளின் விகிதம் 10 சதவிகிதம் அதிகமாக இருக்கும், அனைத்து இடங்களிலும் விவிபிஏடி இயந்திரங்கள் பொருத்தப்படும்: தேர்தல் ஆணையர்
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: தேர்தல் ஆணையர்
வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலை சுலபமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் உரை:
ஜூன் 3-ம் தேதியுடன் லோக்சபா பதவிக் காலம் முடிவடைகிறது.
தேர்தல் ஆணையம், தேர்தல் நேர்மையாக வெளிப்படைத்தன்மையோடு நடப்பதை உறுதி செய்யும்
தேர்தலின் வீச்சும் அளவும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து கொண்டே போகிறது
தேர்தல் சுமூகமாக நடக்க பல்வேறு துறையினரிடம் நாங்கள் ஆலோசனை நடத்தியுள்ளோம்
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, விக்யான் பவனில் செய்தியாளர்கள் மத்தியில் பேசி வருகிறார்.
மெகா பிரசாரத்தைத் தொடங்கிய ஆம் ஆத்மி:
லோக்சபா தேர்தல் வருவதையொட்டி, டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குமாறு வலியுறுத்தி, டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்துக்கு முன்னர் இன்று போராட்டம் நடத்தியது ஆம் ஆத்மி கட்சி. நாளை அந்தக் கட்சி, அக்பர் சாலையில் இருக்கும் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்னர் போராட்டம் நடத்த உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் கம்-பேக் இந்தத் தேர்தலில் அதிகம் பரபரக்கப்படுகிறது:
மிகவும் மூத்த அரசியல்வாதியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார், தேர்தல் அரசியலிலிருந்து விலகிவிட்டதாக கூறியிருந்தார். ஆனால், இந்த முறை அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் எனப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு பவார் போட்டியிட்டு வென்ற மதா தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவார் எனப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு, தனது அரசியல் ஓய்வு குறித்து அறிவித்திருந்தார் பவார்.
முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி, தேர்தல் தேதிகள் பற்றி:
தேர்தல் தேதிகள் குறித்து அதிகம் சலசலக்கப்பட்டு வருகிறது.
கடந்து மூன்று லோக்சபா தேர்தல்கள் (2004, 2009 $ 2014) முறையே, 20 ஏப்ரல் முதல் 10 மே (4 கட்டங்கள்), 16 ஏப்ரல் முதல் 13 மே (5 கட்டங்கள்), 7 ஏப்ரல் முதல் 12 மே வரை (9 கட்டங்கள்) நடந்தன.
இப்போதும் தேர்தல் தேதிகள் முன்பைப் போலவே இருக்கும் என்றாலும், முற்றிலும் அதைப் போன்றே இருக்காது.
இன்று மாலை 5 மணிக்கு, லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நேரம் 'ராகு காலத்துக்கு' உட்பட்டது என்று கூறி அதிருப்தி தெரிவித்துள்ளனர் தென்னிந்திய அரசியல்வாதிகள் சிலர்.
லோக்சபா தேர்தல் தேதிகளுடன், தேர்தல் ஆணையம் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நான்கு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் அரசுகளின் பதவிக் காலம் ஏப்ரல்- மே மாதத்துடன் முடிவுக்கு வருகிறது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, தனிப் பெரும்பான்மைப் பெற்றது. மொத்தம் இருக்கும் 543 தொகுதிகளில் பாஜக, 282 இடங்களில் வெற்றி பெற்றது.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், இந்த முனை பிஜூ ஜனதா தளம் சார்பில் லோக்சபா சீட் ஒதுக்கப்படும் போது, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று பேசியுள்ளார்: ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல்
2014 ஆம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்கு, தேர்தல் ஆணையம், மார்ச் 5-ல் தேர்தல் தேதிகளை அறிவித்தது. அப்போது ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 9 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டன.
ஏப்ரல் 7 ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் ஆரம்பமானது. மே 12 ஆம் தேதி, கடைசிகட்ட தேர்தல் நடைபெற்றது.
லோக்சபா தேர்தல் தேதிகளுடன், தேர்தல் ஆணையம் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலை 5 மணி அளவில் லோக்சபா தேர்தல் தேதிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும்.
இந்திய தேர்தல் ஆணையம், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும், 'பேட்டரி டார்ச்' சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
தெலுங்கானாவில் ஒரு வாரத்துக்கு முன்னர்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இரண்டு பேர், ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தனர். இந்நிலையில் இன்னொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கட்சியில் இணைய உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸில் இருந்து பாஜக-வுக்குத் தாவிய எம்.எல்.ஏ ஜவஹர் சவ்தாவுக்கு, மாநில அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் ஓட்டப்பட்டிருந்த ஒரு போஸ்டரில் அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியுடன் விமானப்படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனுடைய படமும் இருந்ததை அடுத்து, தேர்தல் ஆணையம், 'ராணுவப் படைகளை அரசியல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தாதீர்' என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தியுள்ளது.
ராணுவ சம்பந்தமான புகைப்படங்களையோ, போஸ்டர்களையோ பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணையம், நாட்டில் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.