This Article is From Apr 23, 2019

சிவகார்த்திகேயன் வாக்களிக்க அனுமதி கொடுத்த அதிகாரி மீது நடவடிக்கை!

Elections 2019: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரத்தில், அனுமதி அளித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Advertisement
தமிழ்நாடு Written by

Lok Sabha Elections 2019, Phase 2: தமிழகத்தில் கடந்த 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் வாக்களிக்க வளசரவாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர்ட் பள்ளிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) தனது மனைவியுடன் வருகை தந்தார்.

அப்போது, சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்ற தகவல் வெளியானது. இதனால், அவர் வாக்களிக்காமல் திரும்பிவிட்டார் என்று தகவல் வெளிவந்தது. எனினும், தான் வாக்கினை பதிவு செய்துவிட்டதாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பதிவில் புகைப்படத்துடன் பகிர்ந்திருந்தார்.

இதைத்தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் சிவகார்த்திகேயன் மட்டும் எப்படி வாக்களித்தார் என கேள்விகள் எழுந்தது. சராசரி மக்கள் பலபேர் இதுபோல், வாக்களர் பட்டியிலில் பெயர் இல்லை என்று திரும்பி அனுப்பப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து அடிப்படையில் எப்படி வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.

Advertisement

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாக்கு இல்லாமல் வாக்களித்த விவகாரத்தில், அனுமதி வழங்கிய வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

Advertisement