Read in English
This Article is From Mar 22, 2019

மக்களவை தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டி - வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

பாஜகவுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்த நிலையில் தேர்தலில் அவர் போட்டியை அறிவித்திருக்கிறார்

Advertisement
இந்தியா Edited by

பிரகாஷ் ராஜ் போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

Bengaluru:

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிடும் அவர் இதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரபலமாக இருந்து வருகிறார். அவரது உறவினரரும், எழுத்தாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் அரசியல் பேசி வருகிறார். 

இந்த நிலையில் அவர் பெங்களூரு சென்ட்ரல் மக்களவை தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்து வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 

வேட்புமனுக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''பாஜகவும், காங்கிரசும் தோல்வி அடைந்து விட்டன. நான் மக்களின் குரலாக ஒலிப்பேன்'' என்று கூறியுள்ளார். 

Advertisement

இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. பிரகாஷ் ராஜுக்கு ஆதரவு அளிப்பதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. 

Advertisement