This Article is From Feb 21, 2019

மோடியின் புதிய இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன்: ராகுல் கடும் தாக்கு!

இவர் ஒரு போதும் எதுவும் கொடுத்தது இல்லை, எடுக்க மட்டுமே செய்துள்ளார். இவர்களின் 30 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து பரிசாக அளித்துவிட்டு, எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

மோடியின் புதிய இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன்: ராகுல் கடும் தாக்கு!

ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை ராகுல் கடுமையாக சாடினார்.

ஹைலைட்ஸ்

  • டிவிட்டரில் பிரதமர் மோடியை, ராகுல் கடுமையாக சாட தொடங்கினார்.
  • இவர் எதுவும் கொடுத்தது இல்லை, எடுக்க மட்டுமே செய்துள்ளார் ராகுல் டிவிட்
  • இவர்களின் 30 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து பரிசாக அளித்துள்ளார்
New Delhi:

ஜம்மூ- காஷ்மீரின் புல்வாமாவில், பயங்கரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து முடிந்து ஒரு வாரம் கடந்த நிலையில், ராகுல் காந்தி மீண்டும் பிரதமர் மோடியை சாட தொடங்கியுள்ளார்.

ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் துணிச்சலானது. அவர்களின் குடும்பங்கள் தற்போது போராட்டத்தில் உள்ளது. 40 வீரர்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். ஆனால், அவர்களை தியாகிகளாக ஏற்க மறுக்கின்றனர். இவர் ஒரு போதும் எதுவும் கொடுத்தது இல்லை, எடுக்க மட்டுமே செய்துள்ளார். இவர்களின் 30 ஆயிரம் கோடி பணத்தை எடுத்து பரிசாக அளித்துவிட்டு, எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.

இப்பட்டிப்பட்ட மோடியின் புதிய இந்தியாவுக்கு உங்களை வரவேற்கிறேன் என்று சோனி எரிக்சன் நிறுவனம், தங்களுக்கு கொடுக்க வேண்டிய 453 கோடி ரூபாய் தொகையை அனில் அம்பானி கொடுக்காமல் இருப்பதாக தொடர்ந்த வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட செய்தியை வெளியிட்டிருந்த என்டிடிவி இணையதளத்தின் பக்கத்தை டிவிட்டரில் பகிர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புல்வாமாவில் பயங்கரவாத தாக்குதல் நடந்த சில மணிநேரங்களில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடன், ராகுல்காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்த நேரத்தில் காங்கிரஸ் அரசுக்கு உதவியாய் இருக்கும் என்றும் வேறு எந்த பேச்சுவார்த்தையிலும் சில நாட்கள் ஈடுபட போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

அரசியல் சர்ச்சைகள் குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பியபோது, அவரும் இப்படி இக்கட்டாண சூழ்நிலையில், அரசுக்கும் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் உறுதுணையாய் இருப்போம் என்று கூறினார்.

இந்த சம்பவங்கள் நடந்து முடிந்து சரியாக ஒரு வாரம் கடந்த நிலையில், தற்போது ராகுல் காந்தி மீண்டும் பிரதமர் மோடியை சாட தொடங்கியுள்ளார். எனினும் முன்னதாகவே பாஜக தலைவர் அமித்ஷா காங்கிரஸை தொடர்ந்து சாடி வந்தார். ராணுவ வீரர்களின் உயிர்தியாகம் வீண்போகாது. இது காங்கிரஸ் அரசு அல்ல, பாஜக அரசு என்று அதிரடி கருத்துகளை காங்கிரசுக்கு எதிராக தொடர்ந்து தெரிவித்து வந்தார். இருப்பினும் இத்தனை நாட்கள் மெளனம் காத்து வந்த காங்கிரஸ், தற்போது மீண்டும் பாஜக மற்றும் மோடியை விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளது.

 

 

.