বাংলায় পড়ুন Read in English
This Article is From May 20, 2019

கூட்டணி கட்சிகளுக்கு விருந்து வைக்கும் அமித் ஷா! இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். பங்கேற்கின்றனர்!!

கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் விருந்து ஏற்பாட்டை செய்துள்ளார் அமித் ஷா.

Advertisement
இந்தியா Edited by

டெல்லியில் உள்ள 'தி அஷோக்' ஓட்டலில் பாஜகவின் விருந்து நாளை நடைபெறுகிறது.

New Delhi:

கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நாளை இரவு விருந்து அளிக்கவுள்ளார். கருத்துக் கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், இந்த விருந்து நடைபெறவுள்ளது. 

டெல்லியில் உள்ள தி அசோக் ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது, ஆட்சியமைப்பது குறித்து முக்கிய ஆலோசனையில் அமித் ஷா ஈடுபடுவார் என தெரிகிறது. 

நாட்டில் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முடிவுகள் வியாழன் அன்று அறிவிக்கப்படவுள்ளன. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 302 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 122 இடங்களிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த தேர்தலில் பாஜக உத்தர பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 71 இடங்களை கைப்பற்றி இருந்தது. தற்போது அங்கு மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்திருப்பதால், முந்தைய வெற்றி போல் பாஜகவுக்கு தற்போது கிடைக்காது என்றும், இதனால் ஏற்படும் இழப்பை ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கிடைக்கும் வெற்றி மூலம் பாஜக சரி செய்து கொள்ளும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த நிலையில் நாளை இரவு கூட்டணி கட்சிகளுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இரவு விருந்து அளிக்கிறார். இதில் அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். 

Advertisement