This Article is From Apr 13, 2019

மேற்கு வங்கத்தில் ராகுலின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு; ரத்தானது பொதுக்கூட்டம்!!

சிலிகுரியின் போலீஸ் கமிஷ்னர் பி.எல். மீனா, காங்கிரஸ் கட்சியினர் ராகுலின் ஹெலிகாப்டர் போலீஸ் மைதானத்தில் தரையிறங்க அனுமதி கேட்டதாகவும், இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ராகுலின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு; ரத்தானது பொதுக்கூட்டம்!!

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி 2 இடங்களில் இதுவரை பேசியுள்ளார்.

Kolkata:

மேற்கு வங்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்க வந்த ராகுல் காந்திக்கு, அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து ராகுல் பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ரத்தானது. 

மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் காங்கிரஸ், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் ஆகியோர் தனித்து போட்டியிடுகின்றனர். இதனால் மேற்கு வங்க அரசியல் களம் அனல் பறந்து கொண்டிருக்கிறது. 

இந்நிலையில் சிலிகுரியில் நாளை நடைபெறவிருந்த கூட்டத்தில் ராகுல் பங்கேற்பதாக இருந்தது. இதற்காக அவரது ஹெலிகாப்டர் போலீஸ் மைதானத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

இதையடுத்து அந்த  பொதுக் கூட்டத்தை காங்கிரஸ் நிர்வாகிகள் ரத்து செய்திருக்கின்றனர். மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தி இதுவரையில் மால்டா மற்றும் ராய்கஞ்ச் ஆகிய 2 இடங்களில் மட்டுமே ராகுல் காந்தி பேசியுள்ளார். 

.