கருப்புக் கொடி காட்டுவதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஹைலைட்ஸ்
- எய்ம்ஸ் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்து சர்ச்சை எழுந்தது
- கூட்டணி குறித்து அறிவித்துள்ளார் பொன் ராதாகிருஷ்ணன்
- தமிழகத்தில் 30 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்கிறார்
மக்களவை தேர்தலில் பாஜக ஏற்படுத்தும் கூட்டணி அல்லது அங்கம் வகிக்கும் கூட்டணி குறைந்த பட்சம் 30 தொகுதிகளை கைப்பற்றும் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன், தேர்தல் கூட்டணி குறித்தும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்தும் விளக்கம் அளித்தார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது-
அரசு விழாக்களில் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும்போது நிகழ்ச்சியின் முதல் தொடக்கத்திலேயே பாடியிருப்பார்கள். தமிழ்த்தாய்க்கோ, தமிழ்த்தாயின் வாழ்த்துக்கோ, தமிழுக்கோ எந்த வகையிலும் அவமானம் ஏற்படுவதை பிரதமர் நரேந்திர மோடியும் ஏற்றக் கொள்ள மாட்டார். பாஜகவும் ஏற்காது.
பாஜகவின் கூட்டணி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும். பாஜகவின் கூட்டணி அல்லது பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தமிழகத்தில் குறைந்தது 30 தொகுதிகளை கைப்பற்றும்.
இவ்வாறு பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.