This Article is From Mar 21, 2019

சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த வேட்பாளர்கள் தேர்வு கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிக்கிம், அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!!

இருமாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் 11-ம் தேதி நடக்கிறது

New Delhi:

சிக்கிம் மற்றும் அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.

சிக்கிமை பொறுத்தவரையில் பாஜக தனது 2-வது பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 12 வேட்பாளர்கள் இருக்கின்றனர். அருணாசல பிரதேச சட்டசபை தேர்தலை பொறுத்தளவில் 6 பேர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர் மட்டக்குழுவில் பாஜக வேட்பாளர்கள் தேர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் பாஜக தலைவர் அமித் ஷா, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

60 உறுப்பினர்களை கொண்ட அருணாசல பிரதேச சட்டசபை தேர்தல் ஏப்ரல் 11-ம்தேதி நடைபெறுகிறது. இதேநாளில்தான் 32 உறுப்பினர்களை கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தலும் நடக்கிறது.

இந்த இரு தேர்தல்களும் மக்களவை தேர்தலையொட்டி நடத்தப்படுகின்றன.

.