This Article is From Apr 21, 2019

‘’பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்கிறோம்’’ – பாஜக வேட்பாளர் பிரக்யாவின் கருத்தால் சர்ச்சை!!

Babar Masjid Demolition: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணையை எதிர்கொண்டு வரும் பிரக்யா சிங் தாகூர் மத்திய பிரதேசத்தில் போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

‘’பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்கிறோம்’’ – பாஜக வேட்பாளர் பிரக்யாவின் கருத்தால் சர்ச்சை!!

Pragya Thakur: போபாலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்கொள்கிறார் பிரக்யா.

New Delhi:

Bharatiya Janata Party: பாபர் மசூதியை இடித்ததில் பெருமை கொள்வதாக பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விளக்கம் அளிக்கக்கோரி தேர்தல் ஆணையம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் கடந்த 2008 செப்டம்பர் 29-ம்தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் சாமியார் பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். யு.ஏ.பி.ஏ. சட்டத்தின் பிரிவுகளின்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தற்போது அவர் ஜாமினில் வெளி வந்திருக்கிறார். அவரை மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் மக்களவை தொகுதியின் வேட்பாளராக பாஜக நிறுத்தியுள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரக்யா சிங், ‘பாபர் மசூதியை இடித்ததற்கு நாங்கள் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?. உண்மையில் நாங்கள் செய்ததை எண்ணி பெரு கொள்கிறோம். ராமர் கோயிலை சுற்றி குப்பைகள் இருந்தன. அவற்றை நாங்கள் அகற்றினோம்.' என்று தெரிவித்தார்.

தேர்தல் நேரத்தில் அவர் இவ்வாறு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

.