Read in English
This Article is From Apr 11, 2019

மகாராஷ்டிராவில் உள்ள வாக்குச்சாவடி அருகில் குண்டு வெடிப்பு..!

மாவோயிஸ்ட்டுகள் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதியான காட்சிரோலியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

Advertisement
இந்தியா

லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Mumbai:

மாவோயிஸ்ட்டுகள் தாக்கம் அதிகம் இருக்கும் பகுதியான காட்சிரோலியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து வந்த நிலையில் இந்த வெடி விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதற்கட்ட தகவல்படி, இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 10:30 மணி அளவில் வாகெசாரி பகுதியில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. வாக்குச்சாவடியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் குண்டு வெடித்துள்ளது. வாக்குச்சாவடிக்கு வெளியே ஓட்டு போடுவதற்காக மக்கள் வரிசையில் நின்று கொண்டிருந்த இடத்துக்குப் பக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

நேற்று, கட்டா ஜாம்பியா கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் சி.ஆர்.பி.எப் படையைச் சேர்ந்த ஒருவருக்குக் காயம் ஏற்பட்டிருந்தது.

Advertisement

தேர்தலில் மக்கள் பங்கேற்பதை விரும்பாத மாவோயிஸ்ட்டுகள் இப்படிப்பட்ட தாக்குதலில் ஈடுபடுவதாக அரசு தரப்பு அதிகாரிகள் கூறுகின்றனர். முதல்கட்ட தேர்தலில் மகாராஷ்டிராவில் இருக்கும் காட்சிரோலி உட்பட 7 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. 

கடந்த செவ்வாய் கிழமை, சத்தீஸ்கரின் தன்டேவாடா பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாஜக எம்.எல்.ஏ உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 
 

Advertisement
Advertisement