திரு. ஆனந்த் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரை முருகனின் மகன் ஆவார்
Vellore: காவல்துறையினர் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வேலூர் திமுக வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
டி.எம். கதிர் ஆனந்த் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் வேட்பாளார் பதிவு அறிக்கையில் ‘தவறான தகவல்களை” வழங்கியதாக கூறி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்துள்ளது. காவல்துறையினர் பகிரங்கமாக வேறெந்த தகவலையும் கொடுக்கவில்லை.
காவல்துறையினர் மேலும் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஶ்ரீனிவாசன், தாமோதரன் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரு. ஆனந்த் திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான துரை முருகனின் மகன் ஆவார். வருமான வரி அலுவலர்கள் மார்ச் 30-ம் தேதி துரை முருகனுக்கு சொந்தமான வளாகத்தில் சோதனையிட்டு கணக்கில் வராத 10.50 லட்சத்தைக் கைப்பற்றியது
இரண்டு நாட்களுக்குப் பிறகு வருமான வரி அதிகாரிகள் 11.53 கோடி பணத்தை துரை முருகனுக்கு சொந்தமான குடோனில் பறிமுதல் செய்தனர். அந்தப் பணத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று துரை முருகன் தெரிவித்து விட்டதாக வருமான வரி அதிகாரிகள் கூறினர்.
துரை முருகனிடம் பேசிய போது, “நாங்கள் எதையும் மறைக்கவில்லை எங்கள் குடும்ப உறுப்பினர் அனைவருமே வருமான வரி மதிப்பீடு செய்பவர்களாக உள்ளனர். தேர்தல் அரங்கில் தங்களை எதிர்கொள்ள முடியாத சில அரசியல் தலைவர்கள் செய்யும் சதி” என்று கூறினார்.