This Article is From May 18, 2019

ராகுலுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு! - பாஜக அல்லாத அரசு அமைக்க தீவிரம்!

Lok Sabha Elections 2019: தேர்தல் 2019: சந்திரபாபுவின் தொடர் முயற்சியை தொடர்ந்து, டெல்லியில் வரும் 23.ஆம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராகுலுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு! - பாஜக அல்லாத அரசு அமைக்க தீவிரம்!

Lok Sabha Elections 2019: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்தார்.

New Delhi:

மக்களவைத் தேர்தல் நாளையுடன் நிறைபெற்று, அடுத்த வாரம் முடிவுகள் வரவுள்ள நிலையில், பாஜக அல்லாத அரசை அமைப்பது குறித்து டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்த ஆந்திர பிரதேசம் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

சந்திரபாபுவின் தொடர் முயற்சியை தொடர்ந்து, டெல்லியில் வரும் 23.ஆம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா தலைமையில் எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, இன்று மாலை உத்தரபிரதேசத்தில் மாயாவதி மற்றும் அகிலேஷ் ஆகியோரையும் சந்திரபாபு சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நேற்றைய தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி மற்றும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்துவதற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உட்பட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க தயார் என்று சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். மேலும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி மட்டுமல்ல, பாஜக எதிராக உள்ள எந்த கட்சியும் மெகா கூட்டணியில் இணையலாம் என்று அவர் கூறியுள்ளார்.

.